

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து செய்யும் கொள்முதலும், செலுத்தும் தொகைகளும் கடந்த 6 மாதங்களில் அதிகளவு உயர்ந்துள்ளன.
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து செய்த கொள்முதல்கள் மற்றும் செலுத்திய தொகைகள் குறித்த விவரங்களை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சிறு, குறு நிறுவனங்களிடம் இருந்து செய்யும் கொள்முதல்களும், செலுத்தும் தொகைகளும் கடந்த ஆறு மாதங்களில் அதிகளவு உயர்ந்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்த வருடம் மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கிடையே மட்டும் கொள்முதல்களும், செலுத்திய தொகைகளும் ரூ 2,300 கோடி உயர்ந்து, ரூ 5,000 கோடியை தொட்டுள்ளன. இது கடந்த காலங்களை விட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகமாகும்.
மாதாந்திர கட்டணங்களும், மாதாந்திர கொள்முதலுக்கேற்ப உயர்ந்துள்ளது. மே மாதத்தில் 76 சதவீதமாக இருந்த கட்டணங்களின் விகிதம், அக்டோபர் மாதம் 80 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மாதந்திர நிலுவைத் தொகையின் விகிதம் குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேற்கண்ட காலகட்டத்தில் 24 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக இது குறைந்துள்ளது.