

#எஸ்கார்ட் குழுமத்தின் நிர்வாக இயக்குநர். இவரது தாத்தா இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்.
#சினிமாவோடு நெருங்கிய தொடர்பு உடையவர். இவரது தாயார் ராஜ்கபூரின் மகள். இவரது மனைவி அமிதாப் பச்சனின் மகள்.
#டூன் பள்ளியில் பள்ளிப்படிப்புமும், பிலடெல்பியாவில் இருக்கும் வார்டன் நிர்வாக பள்ளியில் நிர்வாகம் படித்தார்.
#என்னுடைய ஈடுபாடே என் வேலைதான். அதனால் Work-life balance என்பது தேவையில்லாதது. ஆனால் என்னுடைய மனதுக்கு புத்துணர்வு வேண்டும் என்றால் நான் தேடும் இடம் என் குடும்பம்தான் என்று சொல்லி இருக்கிறார்.
#தொழிலில் தினந்தோறும் தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அந்தத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறேன். பேசுவதைவிடக் கேட்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் ஒரு முடிவு எடுக்கும்போது நான் மதிக்கும் நபர்களிடம் கருத்து கேட்டபிறகு முடிவெடுக்கிறேன். இது எனக்கு எளிதாக இருக்கிறது என்று கூறுபவர்.