குஜராத், கர்நாடகாவில் மாகி மீதான தடை நீக்கம்

குஜராத், கர்நாடகாவில் மாகி மீதான தடை நீக்கம்
Updated on
1 min read

குஜராத், கர்நாடக மாநில அரசு கள் மாகி நூடுல்ஸுக்கு விதிக் கப்பட்டிருந்த தடையை நேற்று நீக்கின. நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மாகி நூடுல்ஸ் தற்போது மூன்று ஆய்வக சோதனைகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.

மாகி நூடுல்ஸில் நிர்ணயிக் கப்பட்ட அளவைக் காட்டிலும் ஈயம் இருப்பதாகக் கண்டுபிடிக் கப்பட்டதைத் தொடர்ந்து மாகி நூடுல்ஸுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து மாகி விற்பனைக்கு குஜராத், கர்நாடக அரசு தடை விதித்திருந்தது.

மூன்று ஆய்வக சோதனை களையும் வெற்றிகரமாக முடித்துள் ளதாக மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 90 மாதிரிகள் இவ்வித சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. இந்நிறுவனத்தின் 6 வெவ்வேறு தயாரிப்புகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் குறைவான அளவில் ஈயம் இருப்பது தெரியவந்துள்ளது என்று நெஸ்லே தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

மாகி நூடுல்ஸில் எம்எஸ்ஜி எனப்படும் மோனோசோடியம் குளுட்டோமைட் குறித்த விரிவான விவரம் இல்லாததால் கர்நாடக மாநிலத்தில் மாகி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தடை நீக்கப்பட்டதாக கர்நாடக அமைச்சர் யுடி காதர் தெரிவித் துள்ளார்.

இதைப் போல குஜராத் மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு (எப்டிசிஏ) ஆணையர் ஹெச் ஜி கோஷியா, மாகி நூடுல்ஸுக்கு எப்டிசிஏ விதித்திருந்த தடையை விலக்குவதாக தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in