ரூ 25 கோடி வரி ஏய்ப்பு செய்த 2 பேர் கைது: ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் நடவடிக்கை

ரூ 25 கோடி வரி ஏய்ப்பு செய்த 2 பேர் கைது: ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் நடவடிக்கை
Updated on
1 min read

ரூ 25 கோடி வரி ஏய்ப்புக்காக 2 நபர்களை குருகிராம் ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் கைது செய்தது.

டெல்லி நயா பஜாரில் நிறுவனங்களை நடத்தி வரும் நரேஷ் மிட்டல் மற்றும் செத்திலால் மிட்டல் ஆகியோரை சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவுப் பிரிவின் குருகிராம் மண்டல தலைமை இயக்குநரகம் கைது செய்துள்ளது.

ஹரியானவில் உள்ள பகதூர்கர்-ஐ சேர்ந்தவர்களான இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். ரூ 25 கோடி உள்ளீட்டு வரி கடன் மோசடிக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2020 நவம்பர் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்ட இருவரும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். திகார் சிறையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருவரையும் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in