டோக்கியோ கண்காட்சியில் மன்னிப்புக் கோரினார் ஃபோக்ஸ்வேகன் சிஇஓ

டோக்கியோ கண்காட்சியில் மன்னிப்புக் கோரினார் ஃபோக்ஸ்வேகன் சிஇஓ
Updated on
1 min read

டோக்கியோவில் நேற்று தொடங்கிய ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி ஹெர்பெர்ட் டயஸ் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

ஃபோக்ஸ்வேகன் கார்களில் புகை அளவு வெளியேற்ற கருவி யில் நிகழ்ந்த மோசடிக்காக அவர் மன்னிப்பு கோரினார். வாடிக்கை யாளர்களிடையே நம்பகத் தன் மையை மீண்டும் தங்கள் நிறுவனம் பெற வேண்டும். அதுதான் பிரதான நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் நிகழ்ந்த இந்த செயல் காரணமாக டீசல் கார்களின் அறிமுகம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஜப்பான் பிரிவின் தலைவர் ஸ்வென் ஸ்டெய்ன், ஃபேக்ஸ்வேகன் நிறுவன கார்கள் இடம்பெற்றுள்ள அரங்கில் தோன்றி ஜப்பானிய முறைப்படி சில விநாடிகள் குனிந்தபடி மன்னிப்புக் கேட்டார். ஆனால் அதற்குப் பிறகு மேடையேறிய தலைவர் டயஸ் குனியவில்லை.

ஒட்டுமொத்த நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பு கேட்பதாக டயஸ் கூறினார். தற்போது ஏற்பட்டுள்ள தவறுகளுக்கு உரிய தீர்வு காண்பதுதான் முன்னுரிமையாகும். இனி ஒருபோதும் இதுபோன்ற தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று கூறினார்.

பிராண்டின் பெருமையை மீட்டெடுக்க எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

ஜப்பானில் ஃபோக்ஸ்வேகன் கார்களின் விற்பனை சரிந்ததற்கு புகை அளவு மோசடி மட்டுமே காரணம் என்று கூற முடியாது. சமீபகாலமாக புதிய மாடல்கள் அறிமுகம் செய்யாததும் விற்பனை சரிவுக்குக் காரணம் என்று ஸ்வென் ஸ்டெய்ன் கூறினார்.

அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் புதிய ரக டீசல் காரை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இது தற்போது இரண்டாம் காலாண்டுக்கு தள்ளிப் போகலாம் என்று அவர் மேலும் கூறினார்.

ஏற்கெனவே மோசடியில் சிக்கிய டீசல் என்ஜின்கள்தான் புதிய மாடல் கார்களிலும் இருக்கலாம் என்ற வாடிக்கையாளரின் சந்தேகத்தைப் போக்கவே நிறுவனம் முயன்று கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

ஜப்பானில் அந்நாட்டு நிறுவனங்களான டொயோடா, ஹோண்டா ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகள் தவிர ஃபோக்ஸ்வேன் கார்களும் அதிகம் விற்பனையாகின்றன. ஆண்டுக்கு 60 ஆயிரம் கார்கள் ஜப்பானில் விற்பனையாகின்றன.

ஃபோக்ஸ்வேகன் நிறுவன தயாரிப்புகள் இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் டொயோடா, ஹோண்டா ஆகிய நிறுவனங் கiளின் தயாரிப்புகளை விட அதிகம் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத் தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in