

தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கி, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியு ள்ளது. இதையடுத்து, அந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
93 வருட பாரம்பரியம் கொண்ட தனி யார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி, கடந்த 3 ஆண்டுகளாக கடும் நஷ்டத் தில் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தொடர் நஷ்டம் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கி யுள்ள இந்த வங்கி, தனது வங்கி செயல் பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கை களில் இறங்கியது. ஆனால், அது ஆக்கப்பூர்வமாக இல்லாததால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது இந்த வங்கியின் செயல்பாடு களை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட் டில் கொண்டு வந்துள்ளது.
நஷ்டத்தில் இயங்கியதோடு நிகர மதிப்பும் குறையத் தொடங்கியது. மேலும் வரவு குறைந்து, வாராக் கடன் களும் அதிகரித்த நிலையில் வங்கி திவால் ஆகக்கூடிய அளவுக்கு நிதி நெருக்கடியைச் சந்தித்தது. வங்கியின் கடன் பத்திரங்களின் தரமும் கடுமை யாக குறைக்கப்பட்டது. இதனால் ரிசர்வ் வங்கி தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
முதல்கட்டமாக வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப் பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்து, மத்திய நிதி அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. வங்கி ஒழுங்குமுறை கள் சட்டம் பிரிவு 45-ன்படி கட்டுப்பாடு கள் விதிக்க விண்ணப்பித்தது. இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் நிதி யமைச்சகம் ஒரு மாத காலத்துக்கு பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 16 வரை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில் ரிசர்வ் வங்கி நிய மித்த சிஇஓ மற்றும் இயக்குநர்களை வங்கியின் பங்குதாரர்கள் வெளி யேற்றினர். இதையடுத்து லஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. தற்போது வங்கியின் செயல்பாடுகளை நிர்வகிக்க 3 சுயாதீன இயக்குநர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளது.
மேலும் லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற் கான வேலைகளில் ரிசர்வ் வங்கி இறங்கி யுள்ளது தற்போது வாடிக்கையாளர் களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடு காலம் முடிவதற்குள் இந்த இணைப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்படும் என கூறியுள்ளது. தற்போதைய கட்டுப்பாடு நடவடிக்கை வாடிக்கையாளர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டது என்பதால் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.