அரசு பங்குகளின் ஏல விற்பனை தேதி அறிவிப்பு; அடிப்படை விலை என்ன? 

அரசு பங்குகளின் ஏல விற்பனை தேதி அறிவிப்பு; அடிப்படை விலை என்ன? 
Updated on
1 min read

அரசு பங்குகளை ஏல நடவடிக்கையின் மூலம் விற்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன் படி, (i) '4.48 சதவீத அரசு பங்கு, 2023' ரூ 6,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும் (மறு-வெளியீடு).

(ii) 'இந்திய அரசின் சுழற்சி விகித பங்குகள், 2033' ரூ 2,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும்.

(iii) '6.22 சதவீத அரசு பங்கு, 2035' ரூ 9,000 கோடிக்கு விலை அடிப்படையிலான ஏலத்தின் மூலம் விற்கப்படும்.

மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தில் 2020 நவம்பர் 20 (வெள்ளிக்கிழமை) அன்று இந்த ஏலங்கள் நடத்தப்படும். அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் நவம்பர் 23 (திங்கள்) அன்று பணம் செலுத்த வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in