Published : 17 Nov 2020 07:30 AM
Last Updated : 17 Nov 2020 07:30 AM

ட்ரோன்களைப் பயன்படுத்த சர்வதேச பயிர் ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி

புதுடெல்லி

வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்த, ஐதராபாத்தில் உள்ள சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இயக்குனரகம் நிபந்தனையுடன் கூடிய விலக்கை அளித்துள்ளது.

அரை வெப்ப மண்டலத்துக்கான, சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மையம் (ICRISAT) ஐதராபாத்தில் உள்ளது. இந்த மையம் ட்ரோன்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சக இணை செயலாளர் ஆம்பர் துபே கூறுகையில், ‘‘இந்திய வேளாண் துறையில் வெட்டுக் கிளிகளைக் கட்டுப்படுத்தி, மகசூலை அதிகரிப்பதில், ட்ரோன்கள் முக்கிய பங்காற்றத் தயாராக உள்ளன. இந்தியாவில் 6.6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குறைந்த செலவில் ட்ரோன்களை உருவாக்கும் வழிகளைக் காட்ட, இளம் தொழில் முனைவோர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் மத்திய அரசு ஊக்குவிக்கிறது’’ என்றார்.

வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்த, சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு நிபந்தனையுடன் கூடிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 6 மாத காலம் அல்லது முதல் கட்ட டிஜிட்டல் வான் தளம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை இதில் எது முன்போ, அதுவரை செல்லுபடியாகும். விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ள 18 நிபந்தனைகளையும், கட்டுப்பாடுளையும் கடுமையாகப் பின்பற்றினால் மட்டுமே இந்த விலக்கு செல்லுபடியாகும். நிபந்தனைகள் மீறப்பட்டால், விலக்கு செல்லாததாகிவிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x