

மொத்த விலை குறியீடு அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் 2020 அக்டோபரில் 1.48 சதவீதமாக (தற்காலிகம்) இருக்கிறது.
மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம், 2020 அக்டோபர் (தற்காலிக) மற்றும் ஆகஸ்ட் (இறுதி) மாதங்களுக்கான மொத்த விலை குறியீடு எண்களை வெளியிட்டுள்ளது.
மொத்த விலை குறியீடு அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் 2020 அக்டோபரில் 1.48 சதவீதமாக (தற்காலிகம்) இருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டின் (2019- அக்டோபர்) இதே காலகட்டத்தில் அது 0.00% ஆக இருந்தது.