வங்கி, நிதிச் சேவை துறையில் 16 லட்சம் வேலை வாய்ப்புகள்

வங்கி, நிதிச் சேவை துறையில் 16 லட்சம் வேலை வாய்ப்புகள்
Updated on
1 min read

வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டு துறைகளில் 2022-ம் ஆண்டுக்குள் 16 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய திறன் மேம்பாட்டு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2013 ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுக்குள் நிதிச் சேவை, வங்கி மற்றும் காப்பீட்டு துறைகளில் 16 லட்சம் லட்சம் வேலை வாய்ப்புகள் கூடுதலாக உருவாகும். வங்கி துறையின் கீழ்மட்ட அளவிலான சேவைகள், வங்கிக் கிளைகள் மற்றும் தொழில் பிரதிநிதிகள் விரிவாக்கம் காரணமாக இந்த துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறியுள்ளது.

வங்கித்துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் பொதுத்துறை வங்கிகள் முன் னிலை வகிக்கின்றன. புள்ளி விவரங் கள்படி 73 சதவீத பணியாளர்களை பணிக்கு அமர்த்துகின்றன.

வங்கித்துறையில் வளர்ச்சி சார்ந்து ஆரம்ப நிலையில், வாடிக்கையாளர்களை எதிர்கொள்வது மற்றும் விற்பனை சார்ந்த பணிகளுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும் இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, பொதுத்துறை மற்றும் தனியார், வெளிநாட்டு வங்கிகளின் வளர்ச்சி மற்றும் வங்கித்துறையின் சூழல் சார்ந்த செயல்பாடுகள், வங்கியல்லாத நிதிச் சேவை நிறுவனங்களின் நடவடிக்கைகள் காரணமாக இந்த பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

வங்கித்துறை வளர்ச்சியோடு ஏடிஎம், மொபைல் மற்றும் இண்டர் நெட் பேங்கிங் சார்ந்த பணிகளுக்கு மான மனித வள தேவைகள் இந்த துறையில் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

வங்கித் துறையில் சேமிப்பு மூல மான வருமானம் அதிகரித்துள்ள தாகவும், வங்கித்துறை வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட் டுள்ளது. தற்போதைய நிலவரப்படி வங்கி அலுவலகம் மற்றும் பரிவர்த்தனை நடைமுறைகள் வங்கிச் சேவை துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த துறையில் மேலும் அதிக மாக பயிற்சி பெற்ற திறன்மிகு பணியாளர்களில் தேவை உருவாகி யுள்ளது. எனவே இந்த போக்குக்கு ஏற்ப ஊக்கப்படுத்துப்படுமென தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகரியுமான திலீப் செனாய் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கை கார்ப்பரேட் பேங்கிங், ரீடெயில் பேங்கிங், கருவூலம், நிதிச்சேவை, தொழில்நுட்பம் மற்றும் மனித வளம் சார்ந்து பணியாளர்களின் தேவை அதிகரிக்க உள்ளதாக கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in