Published : 15 Nov 2020 03:54 PM
Last Updated : 15 Nov 2020 03:54 PM

சமூக பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் வரைவு விதி: மத்திய தொழிலாளர் அமைச்சகம் அறிவிப்பு

சமூக பாதுகாப்பு நெறிமுறை 2020-ன் கீழ் வரைவு விதிகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சம் கடந்த 13ம் தேதி அறிவித்துள்ளது. இந்த விதிகள் பற்றிய ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகளை சம்பந்தப்பட்வர்கள், அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 45 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐசி, பணிக்கொடை, பேறுகால சலுகை, சமூக பாதுகாப்பு மற்றும் கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்களுக்கான மேல்வரி, முறைசாரா தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்ரகள், நடைபாதை தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளை செயல்படுத்துவதற்கான வழிகளை இந்த வரைவு விதிகள் வழங்குகின்றன.

முறைசாரா தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், நடைபாதை தொழிலாளர்கள் மத்திய அரசு இணையதளத்தில் தானாக பதிவு செய்வது உட்பட ஆதார் அடிப்படையிலான பதிவை இந்த வரைவு விதிகள் வழங்குகின்றன. இது போன்ற இணையதளத்தை உருவாக்கும் நடவடிக்கையை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

இந்த சமூக பாதுகாப்பு விதிமுறையின் கீழ் பயன்களை பெற, முறைசாரா தொழிலாளர் அல்லது ஒப்பந்த தொழிலாளர் அல்லது நடைபாதை தொழிலாளர், அரசு இணையதளத்தில் இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.

கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் மத்திய அரசு, மாநில அரசு அல்லது மாநில நல வாரிய இணையதளத்தின் குறிப்பிட்ட பகுதியில் ஆதார் அடிப்படையில் பதிவு செய்வது குறித்து இந்த விதிமுறைகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கட்டமான தொழிலாளி, ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு புலம் பெயர்ந்தாலும், தற்போது வேலை பார்க்கும் மாநிலத்தின், அவருக்குரிய பலன்களை பெற முடியும். அந்த தொழிலாளிக்கான பலன்களை வழங்குவது, மாநில கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் பொறுப்பு.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வேலை செய்யும் தொழிலாளிக்கு வழங்கவேண்டிய பணிக்கொடை தொடர்பான வழிகளும் இந்த விதிமுறைகளில் உள்ளது.

ஒரு நிறுவனம் எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்வதற்கும், தொழில் நடவடிக்கைகள் மூடப்பட்டால், அதை ரத்து செய்வது பற்றியும் இந்த விதிமுறைகள் தெரிவிக்கின்றன.

இபிஎப்ஓ மற்றும் இஎஸ்ஐசி திட்டத்தில் இருந்து ஒரு நிறுவனம் வெளியேறும் முறை மற்றும் நிபந்தனைகள் தொடர்பான விஷயங்கள் இந்த வரைவு விதிமுறையில் இடம் பெற்றுள்ளன.

கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்களுக்கான மேல் வரி சுய மதிப்பீடு மற்றும் செலுத்தும் நடைமுறைகளும் இந்த வரைவு விதியில் விவரிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x