Published : 13 Nov 2020 08:28 PM
Last Updated : 13 Nov 2020 08:28 PM

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்: 6 மாதத்தில் 265.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்

புதுடெல்லி

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் மதிப்பு 265.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல்-அக்டோபர் 2020-21 இல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் மதிப்பு (பொருள்கள் மற்றும் சேவைகள் இணைந்து) 265.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது (-)14.53 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது காட்டுகிறது.

ஏப்ரல்-அக்டோபர் 2020-21*-இல் ஒட்டுமொத்த இறக்குமதியின் மதிப்பு 248.58 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது (-)31.89 சதவீதம் என்னும் விகிதத்தில் எதிர்மறை வளர்ச்சியை இது காட்டுகிறது.

குறிப்பு: சேவைகள் துறைக்காக இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரவுகள் செப்டம்பர் 2020-க்கு உரியவை ஆகும்.

அக்டோபர் 2020-க்கான தரவுகள் மதிப்பீடுகளே ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்தடுத்த வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டு அவை திருத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x