மத்திய பட்ஜெட்-  2021-22: மக்கள் ஆலோசனைகள் வழங்கலாம்: நிதியமைச்சகம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மத்திய பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை மக்கள் வழங்கலாம் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வருடாந்திர நிதி நிலை அறிக்கைக்கான (பட்ஜெட்) யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக, தொழில், வர்த்தக சங்கங்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் நிபுணர்களிடம் நிதி நிலை அறிக்கைக்கு முந்தைய ஆலோசனைகளை கடந்த பல வருடங்களாக நிதி அமைச்சகம் நடத்தி வருகிறது.

பெருந்தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, நிதி நிலை அறிக்கைக்கு முந்தைய ஆலோசனைகளை வித்தியாசமான முறையில் நடத்துமாறு பல்வேறு தரப்பில் இருந்து அமைச்சகத்துக்கு ஆலோசனைகள் வரப்பெற்றன.

எனவே, இதற்கான பிரத்யேகமான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதன் மூலம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் விரைவில் அனுப்பப்படும்.

மேலும், வருடாந்திர நிதி நிலை அறிக்கை 2021-22-ஐ மக்களுக்கு நெருக்கமாக எடுத்து சென்று அதில் அவர்கள் பங்குபெறுமாறு செய்வதன் மூலம் இன்னும் ஜனநாயகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எனவே, நிதி நிலை அறிக்கை 2021-22-ஐ குறித்த தங்களது யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை மை கவ் இணையதளத்தில் பொது மக்கள் தெரிவிக்கலாம். இதற்கான வசதி 2020 நவம்பர் 15 அன்று மை கவ் தளத்தில் தொடங்கப்படும். அவர்களது ஆலோசனைகள் தொடர்புடைய அமைச்சங்கள்/துறைகளால் பரிசீலிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in