

பவர்கிரிட் நிறுவனம் 2-வது காலாண்டில் ரூ.3,117 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மின் தொகுப்பு நிறுவனம், இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ஒருங்கிணைந்த அடிப்படையில் வரி செலுத்திய பின் 3,094 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதன் மொத்த வருமானம் ரூ.9831 கோடி ஆகும்.
முழுமையான அடிப்படையில், இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனம் வரி செலுத்திய பின் ரூ.3,117 கோடி லாபம் ஈட்டியுள்ளது, இதன் மொத்த வருமானம் ரூ.9,890 கோடி. இது கடந்த ஆண்டை விட முறையே 23 சதவீதம் மற்றும் 8 சதவீதம் அதிகம்.
இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில், இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் மற்றும் வருவாய் முறையே ரூ.5,142 கோடி மற்றும் ரூ.19,648 கோடி. இது கடந்த நிதியாண்டை விட முறையே 1 சதவீதம் மற்றும் 6 சதவீதம் அதிகம். முழுமையான அடிப்படையில் வரிசெலுத்திய பின் லாபம் மற்றும் மொத்த வருமானம் முறையே ரூ.5,097 கோடி மற்றும் ரூ.19,511 கோடி. இதன் மூலம் இந்நிறுவனம் முறையே 3 சதவீதம் மற்றும் 6 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் மூலதன செலவு சுமார் ரூ.3,100 கோடி மற்றும் மூலதன சொத்து மதிப்பு ரூ.10,693 கோடி.