Published : 16 Oct 2015 09:49 AM
Last Updated : 16 Oct 2015 09:49 AM

இவரைத் தெரியுமா?- சத்ரபதி சிவாஜி

சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (சிட்பி) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2015 பிப்ரவரியில் மத்திய நிதியமைச்சகத்தால் நியமிக்கப்பட்டவர்.

வெளிப்பணி ஏற்பு அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பை வகிப்பார். 1986-ம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானவர்.

மஹாராஷ்டிர மாநில நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை முதன்மை செயலராக பணியாற்றியவர்.

மஹாராஷ்டிர மாநில தொழில்துறை முதன்மைச் செயலர், மஹாராஷ்டிர மாநில ஸ்டேட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

எம்ஓஐஎல் சுரங்க நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

சிகாம் நிறுவனம், மஹாராஷ்டிரா ஏர்போர்ட் டெவலெப்மெண்ட் கம்பெனி, ஸ்டேட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

மத்திய நிதியமைச்சகத்தின் அந்நிய செலாவணி நிதிய பிரிவில் பணியாற்றியுள்ளார்.

எம்பிஏ பட்டம் பெற்றவர். வங்கி மேலாண்மை உத்திகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x