

அமேசான் இணைய சேவை (ஏடபிள்யூஎஸ்) நிறுவனம் தெலங்கானாவில் ரூ.20,761 கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய அளவிலான கிளவுட் பிளாட்பார்மாக இது திகழும்.
இது தொடர்பாக மாநில அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 277 கோடி டாலரை முதலீடு செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஏடபிள்யூஎஸ் தனது முழுமையான செயல்பாட்டை 2022-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார். இவர் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனாவார்.