அக்டோபரில் ரூ.17,000 கோடி அந்நிய முதலீடு

அக்டோபரில் ரூ.17,000 கோடி அந்நிய முதலீடு
Updated on
1 min read

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்திய சந்தையில் இருந்து அதிக அளவு அந்நிய முதலீடு வெளியேறிய நிலையில், நடப்பு அக்டோபர் மாதத்தில் இதுவரை 17,000 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது.

இதில் பங்குச்சந்தைக்கு 3,295 கோடி ரூபாயும், கடன் சந்தைக்கு 13,695 கோடி ரூபாய் முதலீடும் வந்திருக்கிறது. மொத்தம் 16,990 கோடி ரூபாய் இந்திய சந்தைக்கு வந்திருக்கிறது. முந்தைய இரு மாதங்களில் 23,000 கோடி ரூபாய் இந்திய சந்தையில் இருந்து (பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தை) அந்நிய முதலீடு வெளியேறியது.

நடப்பாண்டில் இதுவரை 24,342 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய பங்குச்சந்தைக்கும், 53,091 கோடி ரூபாய் முதலீடு இந்திய கடன் சந்தைக்கும் வந்திருக்கிறது.

பங்குச்சந்தை நிலவரம்

இன்று சீனாவின் மூன்றாம் காலாண்டு ஜிடிபி தகவல்கள் வெளியாக உள்ளன. தவிர முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இந்திய பங்குச்சந்தையின் போக்கினை தீர்மானிக்கும்.

ஹெச்டிஎப்சி வங்கி, விப்ரோ, ஏசிசி, பயோகான், ஹீரோமோட்டோ கார்ப், ஐடியா, ஹெச்சிஎல் டெக், அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இந்த வாரம் வெளியாக இருக்கின்றன. இதனைப் பொறுத்து பங்குச் சந்தையின் போக்கு இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித் திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in