

மின் நிலைய சாம்பல் சரக்கு ரயில் மூலம் சிமெண்ட் ஆலைகளுக்கு செல்ப்படுகிறது.
அனல் மின் நிலையத்தில் கிடைக்கும் சாம்பலை 100 சதவீதம் பயன்படுத்துவதற்கான நடவடிக்கையில் மகாராஷ்டிராவில் உள்ள என்டிபிசி மவுடா மின் நிலையம் ஈடுபட்டுள்ளது.
என்டிபிசி மவுடா மின் நிலையத்தில் இருந்து 3,186 மெட்ரிக் டன் சாம்பல், சரக்கு ரயில் மூலம் கர்நாடகாவின் குல்பர்கியில் உள்ள ராஜஸ்ரீ சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்பட்டது. இந்த நடவடிக்கை வாயிலாக, மகாராஷ்டிராவில் இருந்து சரக்கு ரயில் வழியே அதிகளவிலான சாம்பலை அனுப்பிய முதல் அனல் மின் நிலையம் என்ற பெயரை என்டிபிசி மவுடா பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
2019-20ம் நிதியாண்டில் 23.57 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி சாம்பலை பல்வேறு தயாரிப்புகளுக்கு, என்டிபிசி மவுடா பயன்படுத்தியுள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து, ஆண்டுக்கு சுமார் 24-25 லட்சம் மெட்ரிக் டன் சாம்பல் கிடைக்கிறது.
தற்போது இங்கு கிடைக்கும் 100 சதவீத சாம்பலும் சிமென்ட், சாம்பல் செங்கல், சாலை பிளாட்பார பணிகள், பள்ளங்களை நிரப்பும் பணிகளுக்கு பயன்படுத்தபடுகின்றன.