

ஐடிபிஐ வங்கியில் அரசாங்கத்தின் பங்குகளை விற்பதற்கான வழி முறைகளை மத்திய அரசு யோசித்து வருகிறது. உத்திசார்ந்த விற்பனை, ஓஎப்எஸ் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளும் ஆராயப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதுபொதுத்துறை வங்கி அல்ல என்றும், பங்குகளை விலக்குவதில் கடினம் ஏதும் இருக்காது என்றும் வல்லுநர்கள் தெரிவித்திருக் கிறார்கள்.
ஆக்ஸிஸ் வங்கி போல ஐடிபிஐ வங்கியும் இருக்கலாம் என்று கடந்த மாதம் அருண் ஜேட்லி தெரி வித்தது குறிப்பிடத்தக்கது. ஆக் ஸிஸ் வங்கி பொதுத்துறை வங்கி இல்லை என்றாலும் அதில் மறை முகமாக அரசாங்கத்தின் பங்கு 29.19 சதவீதம் உள்ளது. எல்.ஐ.சி. யூடிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் மூலமாக ஆக்ஸிஸ் வங்கியில் மத்திய அரசுக்கு பங்கு உள்ளது.
இப்போது ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசுக்கு 76.50 சதவீத பங்கு உள்ளது.
இந்த நிலையில் 51 சதவீதத்துக்கு கீழ் மத்திய அரசின் பங்கினை குறைக்க கூடாது என்று அனைத்திந்திய வங்கி பணியாளர் சங்கம் அருண் ஜேட்லிக்கு கடிதம் எழுதி உள்ளது.