

தொடர் தொழில் முனைவர். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மேரு கேப்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2007ல் நிறுவனத்தை இந்த தொடங்கினார்.
பெரிய நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் வி-லிங் நிறுவனத்தின் நிறுவனர்.
பொதுப் போக்குவரத்தில் சிறந்த தரத்துக்கான மும்பை நிர்வாகவியல் சங்கத்தின் தொழில் முனைவர் விருது, தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியதற்காக நாஸ்காம் சிறப்பு விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
மும்பை நகரத்தில் பழைய ஆட்டோ ரிக்ஷா வாகனங்களை மாநில அரசின் ஒத்துழைப்போடு மாற்றியமைத்தவர்.
ஓட்டுநர்களுக்கு சர்வதேச அளவில் பயிற்சிகளை வழங்கும் மோட்டார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமான எம்இடிஏ நிறுவனத்தின் நிறுவனர்.
சில்லரை வர்த்தக நிறுவனமான பிரஸ்கின்ஸ் புட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்.
மும்பையில் உள்ள ஹன்ஸ்ராஜ் மொரார்ஜி கல்வி மையத்தில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.