Published : 13 Oct 2015 09:46 AM
Last Updated : 13 Oct 2015 09:46 AM

இவரைத் தெரியுமா?- சித்தாந்த சர்மா

இண்டர்குளோப் விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. விமான போக்குவரத்து மற்றும் சில்லரை வர்த்தகம் தொடர்பான அனைத்து தொழில் முடிவுகளுக்கும் பொறுப்பாளர்.

இதற்கு முன்பு இந்த நிறுவனத்தின் நிறுவன விவகாரங்கள் துறையின் செயல் இயக்குநராக பொறுப்பு வகித்தார்.

இந்திய அளவிலும், நிறுவனங்கள் சார்ந்தும் விமான போக்குவரத்து சார்ந்து பல திட்டங்களை முன்னெடுத்தவர். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செயல் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் அனுபவம் கொண்டவர். பிரிட்டிஷ் புட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான வெஸ்ட்மில் புட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், அல்லைடு டொமக் ஸ்பிரிட்ஸ் அண்ட் ஒயின் இந்தியா நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுக்கான தலைமை பொறுப்பு மற்றும் வர்த்தக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.

இந்திய பட்டயக் கணக்காளர் மற்றும் நிறுவன செயலர் பயிற்சி பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x