தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 1.23 லட்சம் மெட்ரிக்டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஒப்புதல்

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 1.23 லட்சம் மெட்ரிக்டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஒப்புதல்
Updated on
1 min read

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

காரீப் சந்தை காலம் 2020-21-ல், உணவு தானியங்களை அரசு தொடர்ந்து குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா மற்றும் குஜராத்தில் 31.10.2020 வரை, 204.59 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில் 168.87 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டடது.இதை விட இந்தாண்டு கொள்முதல் 21.16% அதிகம்.

இந்த கொள்முதல் மூலம், சுமார் 17.23 லட்சம் விவசாயிகள், ரூ.38,627.46 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்று பயனடைந்துள்ளனர்.

மேலும் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் 45.10 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

கடந்த 31ம் தேதி வரை, 10293.61 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து, நிலக்கடலை, சோயாபீன் ஆகியவற்றை தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த 6102 விவசாயிகளிடமிடருந்து ரூ.57.78 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்துள்ளன. இதேபோல், கர்நாடகா மற்றும் தமிழக விவசாயிகள் 3961 பேரிடம் இருந்து 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய், ரூ.52.40 கோடி குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பருத்தி கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 31ம் தேதி வரை, 120437 விவசாயிகளிடமிருந்து, 6333719 பருத்தி பேல்கள் ரூ.184563 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in