Published : 01 Oct 2015 10:42 AM
Last Updated : 01 Oct 2015 10:42 AM

376 புள்ளிகள் உயர்வு

இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றத்தைச் சந்தித்தன. உலக அளவிலான பங்குச் சந்தைகளின் ஏற்றம் மற்றும் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை குறைத்தது காரணமாகவும் பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவியது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 376 புள்ளிகள் ஏற்றம் கண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 105 புள்ளிகள் ஏற்றத்தைக் கண்டது.

ஆசியா, ஜப்பான் சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. ஜப்பானின் நிக்கி 2.7 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. ஹேங்சங், ஷாங்காய் சந்தைகளும் ஏற்றமான சூழலில் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச சந்தைகளில் சிறந்த சூழல் நிலவியதாக சந்தை நோக்கர்கள் குறிப்பிட்டனர்.

லாபம் ஈட்டியவை

ஆட்டோமொபைல் பங்குகள் நேற்று உயர்ந்து வர்த்தகமானது. இன்போசிஸ், ஐடிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பார்தி ஏர்டெல், சன் பார்மா, டாக்டர்.ரெட்டீஸ் லேப், கோல் இந்தியா, பிஹெச்இஎல், கெயில், டாடா ஸ்டீஸ் நிறுவன பங்குகள் நேற்று லாபத்தைக் கண்டன.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தோடு ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்ததையடுத்து இந்த நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதம் வரை ஏற்றம் கண்டது.

டெக் மஹிந்திரா, பேங்க் ஆப் பரோடா பங்குகள் 2 சதவீதத்துக்கும் மேல் நஷ்டம் கண்டன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, வேதாந்தா நிறுவனப் பங்குகள் 1 முதல் 2 சதவீதம் வரை நஷ்டத்தைக் கண்டன.

நேற்றைய வர்த்தகத்தில் மும்பைப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளில் 1676 பங்குகள் லாபமாகவும், 981 பங்குகள் நஷ்டமாகவும் வர்த்தகம் ஆனது.

ஐடியா செல்லுலார் நிறுவனம் மாற்றிக் கொள்ளவியலா கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட அதன் இயக்குநர் குழு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு இதன் பங்குகள் 7 சதவீதம் வரை லாபம் கண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x