

தொடர்ந்து ஆறாவது நாளாக இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தன. சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்ந்து 27035 புள்ளியிலும், நிப்டி 24 புள்ளிகள் உயர்ந்து 8177 புள்ளியிலும் முடிவடைந்தன.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பங்குச் சந்தைகள் மீண்டு வருகின்றன. இதனால் கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவுக்கு பங்குச் சந்தைகள் உயர்ந்து வர்த்தகமாகின்றன. கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு பிறகு சென்செக்ஸ் இப்போதுதான் 27000 புள்ளிகளை தாண்டுகிறது.
அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 50 டாலர் என்ற அளவில் நெருங்குகிறது. கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 1316 புள்ளிகள் உயர்ந்துள்ளன.