எச்ஐஎல் இந்தியா லிமிடெட்; முதல் இரண்டு காலாண்டுகளில் 65% வளர்ச்சி

எச்ஐஎல் இந்தியா லிமிடெட்; முதல் இரண்டு காலாண்டுகளில் 65% வளர்ச்சி
Updated on
1 min read

2020-21 நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 65% வளர்ச்சியை எச் ஐ எல் இந்தியா லிமிடெட் அடைந்துள்ளது.

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட் 2020-21 நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் ஏற்றுமதியில் வளர்ச்சியை அடைந்துள்ளது.

2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 65 சதவீத வளர்ச்சியை ஏற்றுமதிகளில் அடைந்துள்ளதாக எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட் தெரிவித்துள்ளது.

டைக்குளோரோ டைபெனில் டிரைக்ளோரோ ஈத்தேன் மற்றும் வேளாண் ரசாயனங்களை தென் ஆப்பிரிக்க நாடுகள், லத்தின் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு மேற்கண்ட காலகட்டத்தில் ஏற்றுமதி செய்ததன் காரணமாக இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.

எச்.ஐ.எல் (இந்தியா) லிமிடெட்டின் முயற்சிகளை பாராட்டிய மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா, "கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 2020-21 நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 65 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ள எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட்டின் நிர்வாகம் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள். எதிர்வரும் வருடத்தில் இன்னும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in