Published : 30 Oct 2020 04:26 PM
Last Updated : 30 Oct 2020 04:26 PM

உள்நாட்டு கப்பல் போக்குவரத்துக்கு சாத்திய கூறுகள்: வரைவு அறிக்கை வெளியீடு

புதுடெல்லி

கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா 2020க்கான வரைவு அறிக்கையை பொது ஆலோசனைக்காக கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியீட்டுள்ளது.

பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் வெளிப்படைத் தன்மையை உருவாக்கும் நோக்கத்துடன் கடலோரக் கப்பல் போக்குவரத்து மசோதா 2020க்கான வரைவு அறிக்கையை பொது மக்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறையினரின் ஆலோசனைக்காக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாட்டில் கப்பல் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தத் துறைக்கென பிரத்தியேக சட்டம் இயற்றுவதன் தேவை உணரப்பட்டது. உலகளாவிய சிறந்த வழிமுறைகளை கருத்தில் கொண்டு இந்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.

தேசிய கடலோர மற்றும் உள்நாட்டு கப்பல் போக்குவரத்து மூலோபிய திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கப்பல்களின் கடலோர வர்த்தகத்திற்கு தேவைப்படும் வர்த்தக உரிமையை ரத்து செய்தல், கடலோரப் போக்குவரத்தில் இந்திய கப்பல்களின் பங்கை அதிகப்படுத்தும் நோக்கத்தில் போக்குவரத்துக் கட்டணத்தை குறைத்து போட்டியுடன் கூடிய சூழலை உருவாக்குவது போன்றவை இந்த வரைவு மசோதாவின் சிறப்பு அம்சங்களாகும்.

மத்திய கப்பல் போக்குவரத்து துறையின் இணையதளத்தில் இந்த வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது குறித்த தங்களது கருத்துக்களை coastalshipping2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 6ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x