2020-ம் ஆண்டில் செப்டம்பர் வரை மத்திய அரசின் வரவு - செலவு எவ்வளவு?

2020-ம் ஆண்டில் செப்டம்பர் வரை மத்திய அரசின் வரவு - செலவு எவ்வளவு?
Updated on
1 min read

நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரையிலான மத்திய அரசின் கணக்குகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

2020- 21 நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திர கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு அது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

செப்டம்பர் 2020 வரை இந்திய அரசு ரூபாய் 4 லட்சத்து 58 ஆயிரத்து 508 கோடி மதிப்பிலான வரி வருமானம், ரூபாய் 92 ஆயிரத்து 274 கோடி மதிப்பிலான வரியில்லா வருமானம் மற்றும் ரூபாய் 14 ஆயிரத்து 635 கோடி மதிப்பிலான கடன் இல்லா மூலதன ரசீதுகள் ஆகியவற்றின் வாயிலாக மொத்தம் ரூபாய் 5 லட்சத்து 65 ஆயிரத்து 417 கோடியைப் பெற்றுள்ளது.

அதிகார பகிர்வு பங்குகளின் வரியாக மாநில அரசுகளுக்கு

ரூபாய் 2 லட்சத்து 59 ஆயிரத்து 941 கோடியை இந்திய அரசு பரிமாற்றம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் தற்போதைய காலத்தை விட ரூபாய் 51 ஆயிரத்து 277 கோடி குறைவாகும்.

மேலும் செப்டம்பர் 2020 வரை ரூபாய் 14 லட்சத்து 79 ஆயிரத்து 410 கோடியை செலவு செய்துள்ளது. இதில் ரூபாய் 13 லட்சத்து 13 ஆயிரத்து 577 கோடி வருவாய் கணக்கிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 136 கோடி மூலதன கணக்கிலிருந்தும் செலவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in