

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய சஞ்ஜீவ் கபூர் விஸ்தாரா நிறுவனத்தின் தலைமை உத்தி மற்றும் வணிக அதிகாரியாக பொறுப்பேற்க இருக்கிறார்.
டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு நிறுவனத்தை சேர்ந்த விமான நிறுவனம்தான் விஸ்தாரா ஆகும். புதிய பொறுப்பில் வரும் 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் இணைய இருக்கிறார்.
விமான டிக்கெட்களை சலுகை விலையில் அறிமுகம் செய்தவர் சஞ்ஜீவ் கபூர். விஸ்தாரா நிறுவனத்தின் தற்போதைய தலைமை வர்த்தக அதிகாரியான ஜியாம் மிங் டோ, தனது அயல் பணி அலுவல் முடிந்த பிறகு மீண்டும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு செல்ல இருக்கிறார்.
இந்த துறையில் 19 வருடங்கள் அனுபவம் கொண்டவர் கபூர். வார்டன் கல்லூரியில் எம்பிஏ படித்தவர். முன்னதாக நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ், பெயின் அண்ட் கம்பெனி, பாஸ்டன் கன்சல்டிங் கம்பெனி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.