

பங்குச்சந்தையில் நேற்று கடுமையான சரிவு காணப்பட்டது. சர்வதேச சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டதன் எதிரொலியாக பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையில் 1.48 சதவீதம் அதாவது 600 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 39,922 ஆனது. தேசிய பங்குச் சந்தையில் 160 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 11,729 புள்ளிகளானது. இது 1.34 சதவீதமாகும்.
ஹெச்டிஎப்சி, இண்டஸ் இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ், அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனப் பங்குகள் 2.79 சதவீதம் முதல் 3.50 சதவீதம் வரை சரிந்தன. அதேசமயம் பார்தி ஏர்டெல், யுபிஎல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் ஏற்றம் பெற்றன.
ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் கடுமையாக சரிந்து 350 புள்ளிகள் வரை சரியக் காரணமாயின.
ஜூலை - செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை பெரும்பாலான நிறுவனங்கள் வெளியிட உள்ளன. இதன் காரணமாக பங்கு விலைகள் சரிந்தன.