

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கனரா வங்கி, தென்னாப்பிரிக்காவில் முதலாவது கிளையைத் திறந்துள்ளது. சர்வதேச அளவில் வங்கியை விரிவுபடுத்தும் நோக்கில் முதலாவது கிளையை ஜோகன்னஸ்பர்க்கில் திறந்துள்ளது.
இந்தியாவில் கனரா வங்கிக்கு 4,750 கிளைகள் உள்ளன. இது தவிர லண்டன், ஹாங்காங், ஷாங்காய், பஹ்ரைன், மாஸ்கோ ஆகிய நாடுகளிலும் கிளைகள் உள்ளன.
விரைவிலேயே டர்பன், கேப்டன், பிரிட்டோரியா ஆகிய பகுதிகளில் கிளைகளைத் தொடங்க உள்ளதாக வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜிவ் துபே தெரிவித்தார்.
தான்சானியா, மொசாம்பிக் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளி லும், ஜெர்மனி, துபாய், மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளி லும் கிளைகளைத் தொடங்கும் திட்டம் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.