வெங்காயம் இறக்குமதி செய்ய விதிமுறைகள் தளர்வு: விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

வெங்காயம் இறக்குமதி செய்ய விதிமுறைகள் தளர்வு: விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை
Updated on
1 min read

நாடுமுழுவதும் வெங்காய விலை உயர்ந்து வரும்நிலையில் அதனை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுகுறித்து நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

2020 ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் இருந்து வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் அதிக அளவில் உயர்ந்த வெங்காயத்தின் விலை, ஒரு கிலோவுக்கு ரூ 11.56 அதிகரித்து, அகில இந்திய சில்லரை விலை ஒரு கிலோவுக்கு ரூ 51.95-ஐ தொட்டுள்ளது.

கடந்த வருடத்தின் இதே காலகட்டத்தில் இருந்த வெங்காயத்தின் விலையான ஒரு கிலோவுக்கு ரூ 46.33 உடன் ஒப்பிடும் போது, இந்த வருடத்தின் விலை 12.13 சதவீதம் அதிகமாக உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2020 செப்டம்பர் 14 அன்று வெங்காய ஏற்றுமதிகளை அரசு தடை செய்தது.

உள்நாட்டு நுகர்வோர்களுக்கு வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதோடு, ராபி-2020 பருவ வெங்காய சேமிப்பை அதிகப்படுத்தவும் அரசு முடிவெடுத்தது.

மேலும், வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.

மேற்கண்ட நடவடிக்கை மூலம் வெங்காய விலையை குறைப்பதற்காக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in