

ரிசர்வ் வங்கி குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி குறையும். ஆனால் வளர்ச் சியை உயர்த்துவதற்கு மேலும் பல நடவடிக்கைகள் தேவை என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை பலப்படுத் தும் நடவடிக்கைகளில் வட்டி குறைப்பு என்பது ஒரு பகுதி மட்டுமே, மேலும் பல நடவடிக்கைகள் தேவை என்றார். அவர் கூறியதாவது.
ஏற்கெனவே மூன்று முறை வட்டி குறைப்பு (நடப்பு நிதி ஆண்டில் 0.75%) செய்திருந்த நிலையில் இப்போது ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. பல காரணங்களால் இது சரியான முடிவும் கூட என்றார்.
பொருளாதாரம் என்பது ஒரே ஒரு விஷயத்தை அடிப்படையாக கொண்டு மட்டுமே செயல்படுவது அல்ல. பல வகையான சீர்த்திருத்தங்கள், நடவடிக்கைகள் தேவை. இதற்கு நாம் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்துவிட்டது. வட்டி குறைப் பின் பலனை வங்கிகள் வாடிக்கை யாளர்களுக்கு கொடுக்க வேண் டும். அப்போதுதான் கடனுக்கான வட்டி குறையும். வளர்ச்சி விகிதம் குறித்த கணிப்புகளை நாம் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.