

2020 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 35.73 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த அன்னிய நேரடி முதலீட்டு வரத்தாகக் கிடைத்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய நேரடி முதலீடு முக்கிய காரணியாகும். முதலீட்டாளர்களுக்கு உகந்த அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இந்த வகைக் கொள்கைகளினால் கடந்த ஆறு ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடு வரத்து பெருமளவில் அதிகரித்திருக்கிறது.
அன்னிய நேரடி முதலீட்டில் தாராளமயமாக்கலைத் தொடர்ந்து கடைப்பிடித்து, மத்திய அரசு பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் (2014-2015-ல் இருந்து 2019-2020 வரை)
* மொத்த அன்னிய நேரடி முதலீடு வரத்து 2008-2014ல் 231.37 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2014- 2020ல் 358.29 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து 55 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்துள்ளது
* அன்னிய நேரடி முதலீட்டு பங்கு வரத்து, 2008-2014ல் 160.46 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2014-2020ல் 252.42 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து 57 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2020- 21 நிதி ஆண்டில் (2020 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை)
* 2020 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 35.73 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த அன்னிய நேரடி முதலீட்டு வரத்தாகக் கிடைத்துள்ளது. நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இதுவே அதிகமாகும். மேலும் 2019- 20ன் முதல் ஐந்து மாதங்களில் கிடைத்ததை விட ( 31.60 பில்லியன் அமெரிக்க டாலர்) இது 13 சதவீதம் கூடுதலாகும் .
* 2020 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மொத்த அன்னிய நேரடி முதலீட்டு பங்கு வரத்து 27.10 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இதுவே அதிகமாகும். மேலும் 2019- 20ன் முதல் ஐந்து மாதங்களின் அளவை விட (23.35 பில்லியன் அமெரிக்க டாலர்) இது 16 சதவீதம் கூடுதலாகும்.