

இந்தியாவில் 10 சதவீத தொழில் முனைவோர்கள் மட்டுமே வெற்றி அடைகிறார்கள். பெரும்பான்மை யான புதிய நிறுவனங்கள் தோற்று விடுகின்றன என்று இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக் குனர் டிவி மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக மேலும் அவர் கூறியது: புதிய தொழில் நிறுவனங்கள்தான் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை உருவாக் கின்றன. அதனால் புதிய நிறுவனங் களை தொடங்குவதற்கு ஏதுவாக மத்திய அரசு கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
10 சதவீத புதிய நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. 25 சதவீத நிறுவனங்கள் தள்ளாடும் நிலையில் செயல்படுகிறது. மீதி 65 சதவீத நிறுவனங்கள் தோற்று விடுகின்றன.
பிரதமரின் ‘டிஜிட்டல் இந்தியா’ பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றி யடையும் பட்சத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 1 லட்சம் புதிய தொழில்முனைவோர்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
இதன் மூலம் 35 லட்சம் நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த நிறுவனங்களின் மதிப்பு 50,000 கோடி டாலராக இருக்கும்.
ஆறாம் வகுப்பு மாணவர்கள் இணையத்துடன் இணைந்திருக் கிறார்கள். தொழில்நுட்பத்துடன் இணைந்திருப்பதால் அடுத்த 15 வருடங்களில் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். சரியான கொள்கைகள் வகுக் கும் பட்சத்தில், அடுத்த பத்தாண்டு களில் தற்போதைய தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை யை விட ஐந்து மடங்கு தொழில் முனைவோர்களை உருவாக் கலாம். புதிய தொழில்முனைவோர் களுக்கான கொள்கைகளை அரசுகள் உருவாக்க வேண்டும். நாங்கள் ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களுடன் இது குறித்து பேசி வருகிறோம்.
இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 2030-ம் ஆண்டு 10 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. புதிய தொழில்முனைவோர்கள் உரு வாகும் போது இது சாத்தியம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 3 அல்லது 4 புதிய நிறுவனங்கள் உருவாகின்றன என்றார்.
இந்தியாவில் 18,000 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக் கின்றன. இதில் 30 லட்சம் நபர்கள் பணியாற்றுகின்றன. இந்த நிறுவ னங்களின் மதிப்பு சுமார் 7,500 கோடி டாலர் ஆகும்.