Published : 18 Oct 2020 05:51 PM
Last Updated : 18 Oct 2020 05:51 PM

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 41.67 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள், எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல்

புதுடெல்லி

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் 41.67 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

காரிப் சந்தை காலம் 2020-21-ல், குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் செயல்பாடுகள்

காரிப் சந்தை காலம் 2020-21, ஏற்கெனவே தொடங்கிவிட்டது. முந்தைய பருவத்தில் கொள்முதல் செய்தது போலவே, தற்போதை காரிப் சந்தை காலம் 2020-21-லும் குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிமிருந்து அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.

தற்போதைய காரிப் சந்தை காலத்தில் நெல் கொள் முதல் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகண்ட், சண்டிகர், கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீரில் சுமூகமாக நடைபெறுகிறது. இங்கு கடந்த 17ம் தேதி வரை, 7.38 லட்சம் விவசாயிகளிடமிருந்து, 84.45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சில மாநிலங்கள் தெரிவித்த விருப்பத்தின் அடிப்படையில், இந்த காரிப் சந்தை பருவத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் 41.67 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

வெளிச்சந்தை விலை, குறைந்த பட்ச ஆதரவு விலையைவிட குறையும் சூழ்நிலையில், மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் விருப்பம் தெரிவித்தால், இதே போன்ற ஒப்புதல், விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும்.

கடந்த 17ம் தேதி வரை, அரசு முகமைகள் மூலம், 723.79 மெட்ரிக் டன் பாசி பருப்பு மற்றும் உளுந்தப் பருப்பு ஆகியவை 723.79 மெட்ரிக் டன் அளவுக்கு ரூ.5.21 கோடி

குறைந்த பட்ச ஆதரவு விலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில், 681 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டன. இதேபோல், 5089 மெட்ரிக் டன் கொப்பரை, குறைந்தபட்ச ஆதரவு விலையில், ரூ.52.40 கோடி மதிப்பில், கர்நாடக மற்றும் தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x