

பொதுத்துறை வங்கியான விஜயா வங்கி தன்னுடைய அடிப்படை வட்டி விகிதத்தை 0.15% குறைத்தது. இப்போது அடிப்படை வட்டி விகிதம் 9.85% இருக்கிறது. முன்னதாக அடிப்படை வட்டி விகிதம் 10 சதவீதமாக இருந்தது. இந்த வட்டி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அடிப்படை வட்டி விகிதம் குறைந்ததால் வீட்டுக்கடன் மற்றும் இதர கடன்களுக்கான இ.எம்.ஐ. குறையும்.வட்டி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு சேர்க்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி பல முறை வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த வாரம் ஹெச்டிஎப்சி வங்கி 0.35 சதவீதமும், கனரா வங்கி 0.10 சதவீதமும் வட்டி குறைப்பு செய்தது.
ரிசர்வ் வங்கி நடப்பாண்டில் 0.75% அளவுக்கு வட்டியை குறைத் திருந்தாலும், வங்கிகள் சராசரி யாக 0.30% மட்டுமே வட்டியை குறைத்ததாக ரிசர்வ் வங்கி கவர்னர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.