Published : 15 Oct 2020 01:01 PM
Last Updated : 15 Oct 2020 01:01 PM

மருந்து ஏற்றுமதியில் இந்தியா சாதனை: சதானந்தா கவுடா பெருமிதம்

புதுடெல்லி

உலகம் முழுவதும் பொதுவான மருந்துகளை பெரும் அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாக சதானந்தா கவுடா கூறினார்.

உலகம் முழுவதும் பொதுவான மருந்துகளை பெரும் அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாக மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் சதானந்தா கவுடா கூறினார். ஆரம்ப கட்டத்தில், அவசரகால நிகழ்வுகளின்போது கோவிட் -19 தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மரபின் கீழ் எச்சிக்யூ மற்றும் அஜித்ரோமைசின் மருந்துகள் அடையாளம் காணப்பட்டிருந்ததாக அவர் கூறினார். உலகம் எங்கிலும் 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா இந்த மருந்துகளை வழங்குகிறது என்று குறிப்பிட்டார்.

இதன் வாயிலாக, மருந்துகளின் நம்பகமான விநியோகஸ்தர் என்ற பெயரை இந்தியா பெற்றிருக்கிறது என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அமெரிக்காவுக்கு வெளியே அமெரிக்கா- எஃப்டிஏ விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படும் அதிக எண்ணிக்கையிலான மருந்து ஆலைகளை (ஏபிஐ-கள் உள்ளிட்ட 262-க்கும் மேற்பட்டவை ) கொண்டிருக்கும் நாடு இந்தியா மட்டும்தான் என்றும் அவர் குறிப்பிட்டார். உயர்தர இணக்கமான நிலைகளைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துப் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

எஃப்ஐசிசிஐ அமைப்பால் நேற்று மாலை ஒருங்கிணைக்கப்பட்ட லீட்ஸ் 2020 என்ற தலைப்பிலான ‘மறுசீரமைப்புக்கான தொலைவுகள்’ என்ற இணைய தளம் வழியிலான லத்தீன் அமெரிக்க & கரீப்பியன் நிகழ்வில் உரையாற்றிய கவுடா, 2024-ம் ஆண்டுக்குள் இந்திய மருந்து துறை 65 பில்லியன் டாலர் தொழிலாக மாறும் என்றார். “நாடு முழுவதும் நான்கு மருத்துவ கருவிகள் தயாரிக்கும் பூங்காக்கள், மூன்று மொத்த மருந்து தயாரிக்கும் பூங்காக்கள், ஏழு பெரிய பூங்காங்களை முன்னெடுப்பதற்கான திட்டங்களை நாம் அண்மையில் தொடங்கி உள்ளோம். புதிய உற்பத்தியாளர்கள் உற்பத்தியோடு இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் முதல் 5-6 ஆண்டுகளுக்கு அவர்களின் விற்பனை அடிப்படையில் நிதி ஊக்கத்தொகைகளுக்கான தகுதியை பெறுவார்கள்,” என்றும் கவுடா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x