

அதிகமான மழை மற்றும் அதிகமான பரப்பளவில் பயிரிட்டதன் காரணமாக உரங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக மத்திய உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா பாராட்டினார்.
பொதுத்துறை உர நிறுவனங்களின் செயல்பாடுகளையும், எதிர்கால தயார் நிலையையும் கவுடா ஆய்வு செய்தார்.பொதுத்துறை உர நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களுடன் ஆய்வு கூட்டம் ஒன்றை மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா நடத்தினார்.
பொதுத்துறை உர நிறுவனங்களின் செயல்பாடுகளையும், அவற்றின் எதிர்கால தயார் நிலையை ஆய்வு செய்வதற்காகவும் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
பொதுத்துறை உர நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களிடையே உரையாற்றிய கவுடா, விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் போதுமான அளவில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவர்களை வலியுறுத்தினார்.
ஊரடங்கு காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தொழிற்சாலைகளை இயக்கி விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ததற்காக பொதுத்துறை நிறுவனங்களை அமைச்சர் பாராட்டினார்.
அதிகமான மழை மற்றும் அதிகமான பரப்பளவில் பயிரிட்டதன் காரணமாக உரங்களுக்கான தேவை அதிகரித்த போதும் உரத் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொண்டதற்காகவும் பொதுத்துறை நிறுவனங்களை கவுடா பாராட்டினார்.