

மொத்த விலை குறியீடு அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் 2020 செப்டம்பரில் 1.32% (தற்காலிகம்) ஆக இருக்கிறது.
2020 செப்டம்பர் மாதத்துக்கான இந்தியாவின் மொத்த விலை குறியீடு எண்கள் வெளியாகியுள்ளன.
மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம், 2020 ஜூலை (இறுதி) செப்டம்பர் (தற்காலிக) மாதங்களுக்கான மொத்தவிலை குறியீடு எண்களை வெளியிட்டுள்ளது.
மொத்த விலை குறியீடு எண்களின் தற்காலிக தகவல்கள் ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி (அல்லது அடுத்த வேலை நாள்) குறிப்பிட்ட மாதத்தின் இரண்டு வாரகால தாமதத்துடன் வெளியிடப்படும். 10 வாரங்களுக்குப் பின்னர், இந்த குறியீடு இறுதி செய்யப்படும். இறுதி தகவல்கள் வெளியிடப்படும். அதன் பின்னர் அது பாதுகாத்து வைக்கப்படும்.
பணவீக்கம்
மொத்த விலை குறியீடு அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் 2020 செப்டம்பரில் 1.32 %(தற்காலிகம்) ஆக இருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டில் (2019- செப்டம்பர்) இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அது 0.33% ஆக இருந்தது.