Published : 13 Oct 2020 07:33 PM
Last Updated : 13 Oct 2020 07:33 PM

பாரத்மாலா பரியோஜனா; சென்னை- பெங்களூர் விரைவுச் சாலை திட்டம்: நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சென்னை- பெங்களூர் விரைவுச் சாலை மற்றும் மும்பை- கன்னியாகுமாரி இடையே 1760 கி.மீ தூரத்துக்கும் சாலைகள் மேம்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.

கேரளாவில் இன்று 8 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராய் விஜயன், மத்திய இணையமைச்சர்கள் வி.கே.சிங், முரளிதரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, புதிய இந்தியாவுக்கான பிரதமரின் தொலை நோக்கை நிறைவேற்றும் வகையில், சாலை கட்டமைப்புகள் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படுத்துவதற்கு, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

இத்திட்டத்தின் கீழ் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து பற்றிய அறிவியல் ஆய்வு மூலமாக , நாட்டில் 35,000 கி.மீ தூரத்துக்கு சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன எனவும், இவற்றில் 1,234 கி.மீ தூரம் கேரளாவில் மேம்படுத்தப்படுகின்றன எனவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சென்னை- பெங்களூர் விரைவுச் சாலை மேம்படுத்தப்படுவதாகவும், மும்பை-கன்னியாகுமாரி இடையே 1760 கி.மீ தூரத்துக்கும் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.

கேரளாவில் ரூ.11,571 கோடி முதலீட்டில் 177 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைக்கும் 7 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டங்களை விரைவில் முடிக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x