

வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான இந்தியா- மெக்சிக்கோ இருதரப்பு உயர்மட்டக் குழுவின் ஐந்தாவது கூட்டம் நடைபெற்றது.
வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான இந்தியா- மெக்சிக்கோ இருதரப்பு உயர்மட்டக் குழுவின் ஐந்தாவது கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.
இந்திய அரசின் வர்த்தகத் துறையின் செயலாளர் டாக்டர் அனுப் வாதவான் மற்றும் மெக்சிகோ அரசின் வெளிநாட்டு வர்த்தக துணை அமைச்சர் லுஸ் மரியா டே லா மோரா ஆகியோர் இணைந்து இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.
இரு நாடுகளில் இருந்து அமைச்சர்கள், துறைகள் மற்றும் வர்த்தக கூட்டமைப்புகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கடந்த சில வருடங்களாக இந்தியா மற்றும் மெக்சிகோவுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தக மற்றும் தொழில் உறவுகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்தை இருநாடுகளும் பாராட்டின.
இந்த கூட்டத்தின்போது இரு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.