

கடன் பத்திரங்கள் மூலம் திரட்டி இருந்த 800 கோடி ரூபாயை அம்டெக் ஆட்டோ நிறுவனம் குறித்த காலத்தில் திருப்பி தரவில்லை. கடந்த செப்டம்பர் 20-ம் தேதிக்குள் முதலீட்டாளர்களுக்குக் கொடுத் திருக்க வேண்டிய சூழலில் இன்னும் அதைத் திருப்பித் தராததால் அம்டெக் ஆட்டோ கடும் சிக்கலில் இருக்கிறது. இதனால் நேற்றைய வர்த்தகத்தில் அந்த பங்கு கடுமையாக சரிந் தன.
80-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து அம்டெக் ஆட்டோ ஐந்து வருடங்களுக்கு முன்பு 800 கோடி ரூபாய் திரட்டியது. செப்டம்பர் 20-ம் தேதி அத்தொகையைத் திருப்பி தரவேண்டும், ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறுவனம் திருப்பி தரவில்லை.
ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான அம்டெக் ஆட்டோவுக்கு 17,600 கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதிதிரட்ட வங்கிகளிடம் அம்டெக் ஆட்டோ முயற்சி செய்வதாகத் தெரிகிறது. இதுதவிர நிறுவனத்தின் வெளிநாடு வியாபாரம் மற்றும் பயன்படுத்தப்படாத சொத்துகளை விற்பதன் மூலம் அடுத்த 12-15 மாதங்களில் ரூ.6,500 கோடி நிதி திரட்ட திட்டமிட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஜேபி மார்கன், ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, சிண்டிகேட் வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட 80 வாடிக்கையாளர்களிட மிருந்து 800 கோடி ரூபாயை திரட்டியது. தவிர அம்டெக் குழும நிறுவனங்களுக்கு 32 வங்கிகள் சுமார் 15,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் (பத்திரங்கள் மூலம் நிதி திரட்டியதும் அடங்கும்) கொடுத்திருக்கின்றது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 11 சதவீதம் சரிந்து 45.85 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.