ஏடிஎம் பரிவர்த்தனை குறித்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவுறுத்தல்

ஏடிஎம் பரிவர்த்தனை குறித்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவுறுத்தல்
Updated on
1 min read

ஏடிஎம் பரிவர்த்தனையில் பணம் வராமல், பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைக் குறிப்பிட்ட அவகாசத்துக்குள் வரவு வைக்கவில்லை எனில், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தினமும் ரூ.100 இழப்பீடுவழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது, சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணம் பிடித்தம் செய்யப்பட்டு இருக்கும். ஆனால், இயந்திரத்தில் பணம் வந்திருக்காது. அவ்வாறு வராததொகை, குறிப்பிட்ட அவகாசத்துக்குள், தொடர்புடைய வாடிக்கையாளர்களின் கணக்கில் வங்கிகள் வரவு வைக்க வேண்டும்.

ஆனால், வங்கிகள் அவ்வாறு வரவு வைப்பது இல்லை. மாறாக, கூடுதல் அவகாசத்தை வங்கிகள் எடுத்துக் கொள்கின்றன.

வாடிக்கையாளருக்கு இழப்பீடு

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும்வகையில், ஏடிஎம்-மில் பணம் வராமல் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் வரவு வைக்கவில்லை எனில்,வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடுவழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

இதன்படி, குறிப்பிட்ட கால த்துக்குள் வரவு வைக்கத் தவறினால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும், ரூ.100 இழப்பீடாக வங்கிகள் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in