Last Updated : 15 Sep, 2015 10:15 AM

 

Published : 15 Sep 2015 10:15 AM
Last Updated : 15 Sep 2015 10:15 AM

பணவீக்கம் மைனஸ் 4.95 சதவீதமாக சரிவு

ஒட்டுமொத்த விலைக் குறி யீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப் படையிலான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் மைனஸ் 4.95 சதவீதமாக சரிந்தது. தொடர்ந்து 10-வது மாதமாக நாட்டின் பணவீக்கம் சரிந்து வருவதால் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டிய நெருக்கடி ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ளது.

வெங்காயம் மற்றும் பருப்பு வகைகள் தவிர்த்து பெரும்பாலான உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயரவில்லை.

உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதில் ஓரளவு முன்னேற்றம் எட்டப்பட் டுள்ளதாக பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

டபிள்யூபிஐ அடிப்படையிலான உணவுப் பொருள்களின் பண வீக்கம் குறைந்துள்ளதை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ளும். இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்படுகிறது. இப்போதைய ஒட்டுமொத்த சூழலைக் கருத்தில் கொண்டு ஆர்பிஐ உரிய நேரத்தில் சரியான முடிவை அறிவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூலை மாதத்தில் டபிள்யூபிஐ அடிப்படையிலான பணவீக்கம் மைனஸ் 4.05 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து பண வீக்கம் மைனஸ் நிலையிலேயே நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 3.85 சதவீதமாக இருந்தது குறிப் பிடத்தக்கது.

வெங்காயத்தின் விலை 65.29 சதவீதமும் பருப்பு விலை 36.40 சதவீதமும் உயர்ந்திருந்தது.

இருப்பினும் ஒட்டுமொத்தமாக உணவுப் பொருள்களின் விலை மைனஸ் 1.13 சதவீதம் குறைந் திருந்தது. காய்கறிகளின் விலை மைனஸ் 21.21 சதவீதமும் உருளை விலை மைனஸ் 51.17 சதவீதமும் குறைந்திருந்தது.

எரிபொருள் துறை மைனஸ் 16.50 சதவீத அளவுக்கும், உற்பத்தித் துறை மைனஸ் 1.92 சதவீதமாகவும் இருந்தது.

இப்போதைய சூழலை ரிசர்வ் வங்கி சாதகமாக பயன்படுத்தி வட்டி விகிதத்தை கடுமையாகக் குறைப்பதன் மூலம் வளர்ச்சிக்கு வழிவகுக்க முடியும் என்று ஃபிக்கி தலைவர் ஜோத்ஸனா சூரி கருத்து கூறியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

இதன்படி அடுத்த நிதிக் கொள்கையை இம்மாதம் 29-ம் தேதி வெளியிட உள்ளது. அப்போது வட்டி குறைப்பு குறித்த அறிவிப்பை ஆர்பிஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கமும் குறைந்து வரும் சூழலில் வட்டிக் குறைப்பு அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்று இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வலியுறுத்தியுள்ளது. எதிர்வரும் நிதிக் கொள்கையில் கடனுக்கான வட்டியை அரை சதவீதம் வரை ஆர்பிஐ குறைக்கும் என எதிர்பார்ப்பதாக சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

பணவீக்கம் அதிகரிப்பை விட மைனஸில் பணவீக்கம் இருப் பது மிகவும் ஆபத்தானது. பொருள்களின் விலை குறை வது பொருளாதார சரிவை உணர்த்துகிறது. பொருள் விலை குறையும்போது விஷ வளையம் உருவாகிறது என்று பொருள். இதனால் மக்களது செலவிடும் அளவு குறையும். இது வளர்ச்சியை பாதிக்கும் என்று அசோசேம் தலைவர் ராணா கபூர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆர்பிஐ கால் சதவீத அளவுக்கு வட்டியைக் குறைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது என்று ரேட்டிங் நிறுவனத்தின் ஆய்வாளர் தேவேந்திர குமார் பந்த் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜூனில் முடிந்த காலாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருந்தது. கடந்த நிதி ஆண்டு இதே காலத்தில் வளர்ச்சி 7.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x