Published : 04 Sep 2015 10:36 AM
Last Updated : 04 Sep 2015 10:36 AM

இவரைத் தெரியுமா?- பிபின் பிரீத் சிங்

மொபைல் வாலட்டான மொபிக்விக் நிறுவனத்தின் நிறுவனர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர்.

தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர் சேவை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற துறைகளுக்கு பயன்படுத்துவதில் வல்லுனர்.

இண்டெல், நிவிடியா, பிரிஸ்கேல் செமிகண்டக்டர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

ஸ்டார் ஆட்டோ நிறுவனத்தின் விளம்பர வெளியீட்டுக்கான பங்குதாரராக இருக்கிறார், ஜனக்ராகா சேவை நிறுவனத்தின் தன்னார்வ ஆலோசகராகவும் உள்ளார்.

மொபிக்விக்கின் துணை நிறுவனமான ஸாக் இ-பேமண்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர். இந்த நிறுவனம் 2010-ல் தொடங்கப்பட்டது.

மொபைல் மூலம் பணப் பரிவர்த்தனைக்காக இந்த செயலியை தொடங்கினார். நூறு கோடி இந்தியர்களும் மொபிக்விக் மொபைல் வாலட் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இவரது இலக்கு.

டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x