Published : 10 Oct 2020 07:40 AM
Last Updated : 10 Oct 2020 07:40 AM

எஸ்எம்எஸ் மூலம் ஜிஎஸ்டி ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்யும் வசதி அறிமுகம்: சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகள் தகவல்

சென்னை

சரக்கு மற்றும் சேவை வரி கணக்குத் தாக்கல் செய்ய, பில் ஏதும் இல்லாத நிலையில் மொபைல் போனில் குறுந்தகவல் வாயிலாக, ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சரக்கு மற்­றும் சேவை வரிசெலுத்த, மாதம்தோறும் ஜிஎஸ்டிஆர் 1 மற்­றும் ஜிஎஸ்டிஆர் - 3பிபடிவங்கள் தாக்கல் செய்­யப்படுகின்றன. இதில், ஜிஎஸ்டிஆர்- 3பி படிவத்தை, மாதம்தோ­றும் 20-ம் தேதிக்­குள், தாமதக் கட்­ட­ணம் இன்றி தாக்கல் செய்­ய­லாம்.

இந்நிலையில், தற்போது, ஜிஎஸ்டி கணக்குத் தாக்கல் செய்ய,பில் ஏதும் இல்லாத நிலையில் மொபைல் போனில் குறுந்தகவல்(எஸ்எம்ஸ்) வாயிலாக, ‘நில்ரிட்டன்’ தாக்கல் செய்யும் வசதிஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு மாதத்தில் எந்த சேவையோ, விற்பனையோ இல்லை எனில், அந்த மாதத்துக்கு ‘நில் ரிட்டன்’ தாக்கல் செய்ய வேண்டும். இதை, மொபைல்போனிலிருந்து குறுந்தகவல் அனுப்பி, தற்போது தாக்கல் செய்யலாம்.

ஆனால், இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள நிறுவனத்தின் பதிவாளரின் மொபைல் எண், ஜிஎஸ்டி போர்டலில் பதிவு செய்து இருக்க வேண்டும்.

அத்துடன், ஏற்கெனவே ஜிஎஸ்டிஆர் - 3பி படிவம் தாக்கல் செய்து இருக்க வேண்டும். எந்த வரியும் நிலுவையில் இருக்கக் கூடாது மற்றும் தாமதக் கட்டணமோ அல்லது வட்டியோ செலுத்தி இருக்கக் கூடாது. இந்த நிபந்தனைகளின்படி, மாதம்தோறும் குறுந்தகவல் அனுப்பி நில் ரிட்டன் தாக்கல் செய்யலாம்.

எஸ்எம்எஸ் செய்யும் முறை

இதற்கு, NIL என டைப் செய்து இடைவெளி விட்டு 3B என டைப் செய்து, இடைவெளி விட்டு, GSTIN டைப் செய்து இடைவெளி விட்டு, வரி செலுத்துவதற்கான மாதத்தை டைப் செய்து, 14409 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பினால், ஜிஎஸ்டிபோர்டலில் இருந்து மொபைல் எண்ணுக்கு குறியீட்டு எண் வரும். தொடர்ந்து, CNF என டைப் செய்து இடைவெளி விட்டு, 3B என டைப் செய்து இடைவெளி விட்டு, குறியீட்டு எண்ணை டைப் செய்து, மீண்டும் 14409 எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு குறுந்தகவல் அனுப்பி, 3பி நில் ரிட்டன் தாக்கல் செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x