

ஆசியாவின் பழமையான பங்குச் சந்தையான பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-யை பங்குச் சந்தையில் பட்டியலிட பங்கு தாரர்கள் அனுமதி வழங்கி இருக் கிறார்கள். ஆபர் பார் சேல் முறையில் 10 சதவீதம் அல்லது அதற்கு மேலான பங்குகளை விற்க பங்குதாரர்கள் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை மும்பையில் நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிமுறை படி பங்குச்சந்தை நிறுவனத்தை தங்களது பங்குச்சந்தையில் பட்டி யலிட முடியாது. இதற்கு செபி மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவை.
பங்குதாரர்கள் ஒப்புதல் கிடைத்துவிட்டதால் இதற்கென ஒரு குழு அமைக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இயக்குநர் குழு தலைவர் இந்த கமிட்டியின் தலைவராக இருப்பார் என்றும், ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப் படக்கூடும் என்றும் தெரிகிறது. இவர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் கூடி இதனை செயல்படுத்த நட வடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இதற்கான வரைவினை செபியிடம் பிஎஸ்இ சமர்ப்பித்தது. தற்போது இந்தியாவில் எம்சிஎக்ஸ் (கமாடிட்டி சந்தை) மட்டுமே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.