

மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாடே மின் வாகன பயன்பாட்டுக்கு மாறிவரும் நிலையில், லித்தியம் அயர்ன் பாட்டரி உதவியுடன் மின்சக்தியில் இயங்கும் ‘ட்ரியோ’ வகை ஆட்டோ பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற நீடித்த தன்மை கொண்டதாக விளங்குகிறது.
மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவன நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மகேஷ்பாபு கூறும்போது, “தற்போது 400-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விற்பனையாகும் ‘ட்ரியோ’ விற்பனை 5 ஆயிரத்தைகடந்துள்ளது. இதுவரை இவ்வகை ஆட்டோக்கள் 3.5 கோடி கி.மீ. தூரம் சாலைகளில் பயணித்துள்ளன. இதன்மூலம் 1,925 மெட்ரிக் டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
தனித்தன்மையான ஸ்டைல், சிறந்த செயல்திறன் கொண்ட ட்ரியோ ஆட்டோ மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் வரை சேமிக்க முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 265 கி.மீ. வரை பயணம் செய்யும் இந்த வகை ஆட்டோக்களை எங்கு வேண்டுமானாலும் மீண்டும் சார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த ஆட்டோவில் உள்ள லித்தியம் அயர்ன் பாட்டரி 1.5 லட்சம் கி.மீ. வரை ஓடும் ஆற்றல் கொண்டது. பெரிய வீல்பேஸ் இருப்பதால், விசாலமான கேபின் கொண்டதாக இந்த ஆட்டோக்கள் விளங்குகின்றன. 12.7 டிகிரி சாய்தளத்திலும் இவை சுலபமாக ஏறக்கூடியவை. இந்த வகை ஆட்டோக்கள் 3 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கான நிலையான உத்தரவாதத்துடனும், 2 ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சம் கி.மீ தூரத்துக்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்துடனும் கிடைக்கின்றன.