Published : 09 Oct 2020 07:31 AM
Last Updated : 09 Oct 2020 07:31 AM

மெர்சிடஸ் - பென்ஸ் மின்சார கார் அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் ‘ஈக்யூசி’ (Mercedes-Benz EQC) என்ற பெயரில் புதிய மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் ‘லட்சியம் 2039’ என்ற பெயரில் எதிர்காலத்துக்கு ஏற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்த தன்மை கொண்ட வாகனங்களை தயாரிக்கும் முனைப்பில் உள்ளது. அந்த வகையில் மெர்சிடஸ்-பென்ஸ் ஈக்யூ பிராண்டில் ‘ஈக்யூசி’ என்ற புதிய மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கார் இந்தியாவில் ரூ.99.30 லட்சம் விலையில் விற்கப்படுகிறது. வீட்டில் சார்ஜ் செய்யும் வசதி, சார்ஜிங்பெட்டி, 5 ஆண்டு சாலை உதவி, 5 ஆண்டு சர்வீஸ், 5 ஆண்டு எல்லையில்லா கி.மீ. நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம், 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கி.மீ. தூர பாட்டரி உத்தரவாதம் ஆகியவை இதில் அடங்கும்.

முன் மற்றும் பின்பக்க சக்கரங்களில் இணைக்கப்பட்டுள்ள 2 சக்திவாய்ந்த மோட்டர்கள் மூலம் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவதாக இக்கார்கள் இருக்கும். இக்காரை வாடிக்கையாளர்கள் www.shop.mercedes-benz.co.in இணையதளம் மூலமும் வாங்க முடியும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x