Published : 26 Sep 2015 08:34 AM
Last Updated : 26 Sep 2015 08:34 AM

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 4 பெண்கள்

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டி யலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் நான்கு பெண்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். ஓபி ஜிண்டால் குழுமத்தின் தலைவர் சாவித்திரி ஜிண்டால், யூஎஸ்வி பார்மா நிறுவனத்தின் லீனா திவாரி, ஹேவல்ஸ் குழுமத் தலைவர் வினோத் குப்தாவின் மனைவி கிமத் ராய் குப்தா மற்றும் பென்னெட் அண்ட் கோல்மென் நிறுவனத்தின் இந்து ஜெயின் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த நான்கு பெண்களின் சொத்துமதிப்பு 920 கோடி டாலர்கள் ஆகும். 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 34,500 கோடி டாலர்கள். இதில் பெண்களின் பங்கு சுமார் 3 சதவீதம் மட்டுமே. சாவித்திரி ஜிண்டால் இந்தியாவின் பணக்கார பெண்ணாக இருக்கிறார். இவரின் சொத்துமதிப்பு 380 கோடி டாலர். இவர் 23-வது இடத்தில் இருக்கிறார்.

தொடர்ந்து 9 வருடமாக ரிலை யன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். இவரது சொத்துமதிப்பு 1,890 கோடி டாலராகும்.

லீனா திவாரி 54 வது இடத்தி லும், இந்து ஜெயின் 57-வது இடத்தி லும் இருக்கிறார்கள். கிமத் ராய் குப்தா 74 இடத்தில் இருக்கிறார்.

சன்பார்மா தலைவர் திலிப் சாங்வி இரண்டாம் இடத்திலும், விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்திலும், ஹிந்துஜா சகோதரர்கள் நான்காவது இடத்திலும், பலோன்ஜி மிஸ்திரி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஷிவ் நாடார், கோத்ரெஜ் குடும்பம், லஷ்மி மிட்டல், சைரஸ் பூனாவாலா, குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்த பட்டியலில் புதிதாக 12 நபர்கள் நுழைந்திருக்கிறார்கள்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x